தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.