தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று கூறினார். அதன்படி, இந்த முகாம்கள் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.