செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.

எப்ப பார்த்தாலும் 4 ஆயிரம் கோடி திட்டம் செயல்படுத்துறோம்ன்னு சொல்றாங்க. இவரு 4000 கோடில செயல்படவில்லை. அண்ணா திமுக ஆட்சி இருக்கின்ற போது சென்னை மாநகரத்திற்கு இந்த திட்டத்தை தீட்டி அதன் மூலமாக  நாங்க செயல்படுத்தினோம். அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள் செயல்படுத்தினாங்க. இவங்க புதுசா எந்த திட்டத்தையும் கொண்டு வரல. ஏற்கனவே அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது தான் இந்த திட்டம்.

முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற தகவல் அத்தனையும் பொய் செய்தி தான். உண்மையை  செய்வதே  கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 4000 கோடி திட்டம்.  இவர்களாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு டெண்டர் விடுவதில் கோளாறு…. கலெக்சன். கமிஷன். கரப்ஷன் அதிலேயே காலத்தை கடத்துறாங்க. துறையினுடைய அமைச்சர் அப்புறம்  மாநகரத்தில் இருக்கிற அமைச்சர்..

அதுல இருக்கிற கவுன்சிலர்  எல்லாத்துக்கும் பங்கு பிரிப்பதற்கே நேரம் சரியா இருக்குது. எங்க திட்டத்தை நிறைவேற்றினார்கள். முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த வடிகால் வசதி எளிதாக இருந்திருக்கும். தேங்கிய  நீர் வெளியே எளிதாக போயிருக்கும் அதை எல்லாம் செய்யவில்லை இதுதான் கோளாறு என தெரிவித்தார்.