
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பீர் விற்பனையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது புதிய வகை பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்யும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி இந்த பீர் தண்டர்போல்ட் ஸ்ட்ராங் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வகை பீர் நவம்பர் எட்டாம் தேதி இரவு முதல் அனைத்து வகை மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதன் விலை 160 ரூபாய் ஆகும். அதனைப் போலவே காட்பாதர் என்ற பீரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக இன்னும் நான்கு அல்லது ஐந்து வகை பீர்கள் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.