செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நூறு வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணிடுச்சி…. விடுதலைக்கு முன்னாடியே முடிவு பண்ணிடுச்சு….. அதை இப்போ ஒவ்வொண்ணா செயல்படுத்தி வருது. அதில் ஒன்றுதான் ஒரே கல்விக் கொள்கை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை.  RSS கொள்கையா ? இல்லையா?அதை அப்படியே தமிழக அரசு ஏற்றுக்கொண்டு  இருக்கா ? இல்லையா ? எதிர்க்கட்சியா இருக்கும் போது எதிர்த்து.

நீ ( தமிழக அரசு ) அவன் சொல்லியது அப்படியே பதிவு பண்ணி இருக்க…. நீங்க சனாதானம்ன்னா…. உயர்ந்த நிலையான அறம்னு போட்டு வச்சி இருக்கீங்க…  மனுஸ்மிருதின்னா  இதே தான்…  ஒவ்வொண்ணுக்கும் இதே தான்… பெண்கள் விடுதலை என்றால் ? இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை  நீக்கணும்னு சொல்கிற…. அவங்க கோட்பாட்டை…  நீ  செயல்படுத்துற….  இல்லம் தேடி கல்வி யாருடையது ? இல்லம் தேடி மருத்துவம் யாருடையது ?

இல்லம் தேடி கல்வி வந்துருது… அப்ப எங்க ஊர்ல இருக்கின்ற ஆரம்ப பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடிடுவியா ? இல்லம் தேடி கல்வின்னா…  யாருடைய திண்ணையில் உக்கார்ந்து  பாடம் நடத்துவ ? என் வீட்டுத் திண்ணையில தாழ்த்தப்பட்டவன உட்கார விடுவனா ? நான் தாழ்த்தப்பட்டவன்…  உங்க வீட்டு திண்ணையில் உக்காந்து பாடம் நடத்த விடுவீங்களா ? சரி அதுக்கு பாடத்திட்டம் என்ன ?  எத்தனை கேள்வி எழுப்புகிற… பாடத்திட்டம் என்ன ? இந்த பாட நடத்துற வாத்தியாருக்கு கல்வி தகுதி என்ன ?

ஏற்கனவே படிச்சிட்டு வேலையெல்லாம பல ஆயிரம் பேர் பட்னி கிடந்தது போராட்டம் நடத்தியவர்களுக்கு நீங்க கொடுத்த மதிப்பு என்ன ? வாத்தியார் தேர்வு எழுதனவனே தெருவுல நிற்கிறான். இவனுக்கு தேர்வு திருத்தம் இருக்கா ? அதுக்கு மதிப்பெண் இருக்கா ? அந்த மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்கா ? சும்மா ஏதாச்சு பேசக்கூடாது… இல்லம் தேடி கல்வி….இல்லம் தேடி மருத்துவம்…. இல்லம் தேடி டாஸ்மார்க்… இல்லம் தேடி மது என ஒன்னு அறிவிச்சு விடு…  அவ்வளவுதான… தெருவுக்கு வந்துடுச்சு…. வாசலுக்கு வந்து குடுத்துட்டு போயிடு என சீறினார்.