
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சுப முகூர்த்த நாட்களில் ஆவண பதிவுகள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நாட்களில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் முகூர்த்த தினம் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி வரும் நிலையில் அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும்.
இரண்டு சார்பதிவாளர்கள் இணைந்துள்ள அலுவலகங்களுக்கு வழக்கமான 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகமான ஆவண பதிவுகள் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான 12 தக்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.