
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று வரையிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை முடிந்து இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கையை முன்னிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.