தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்தி முடித்து ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொது தேர்வுகளுக்கு வராத பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணைத் தேர்வு எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி வழங்குவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் இல்லம் தேடி கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.