பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆசிரியர்களுக்கு பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதாவது பள்ளிகளில் மாணவர்களுடைய ஜாதி மோதல் ஏற்படாதவாறு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் சாலை விபத்துகளை தடுக்க மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளி அளவிலும் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக அவர்களை தயார் செய்ய வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அது உடனே சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.