அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு அதிகரிப்பை மனதிற்கொண்டு, நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கல்வித்துறைக்காக இதுவரை 57 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களுடைய கல்வித்தரத்தை உயர்த்தும் விதமாக மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.