தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இந்நிலையில் கல்வியினை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த வேலை நாளுக்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி விடுமுறை தினமாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார். இருந்தாலும் அன்றைய தினம் பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல பள்ளிகள் செயல்படும்