தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 40 அடி கொடி கம்பத்தில் இன்று நடிகர் விஜய் கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து கட்சி பாடலும் இன்று வெளியாகிறது. இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் சிறக்க நாடங்கும் இன்று முதல் தமிழக வெற்றிக்கழகத்தின் வீரக்கொடி வெற்றிக்கொடி பறக்க இருக்கிறது என்று தெரிவித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரின் கட்சி கொடி மற்றும் பாடலுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் இன்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து சென்னை பனையூர் அலுவலகத்திற்கு காரில் கிளம்புகிறார். இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் அவர் கொடி ஏற்றுகிறார். மேலும் இதை தொடர்ந்து கட்சி பாடலும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த விழாவில் 250 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் முதல் பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.