
தமிழக அரசானது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளின் பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடிவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்னதாக MTC பேருந்துகள் சிலவற்றில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் SETC பேருந்துகளில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.