தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மூன்றாம் தேதி சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணங்கள் நடைபெற உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மணமக்கள் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த திருமணங்களை திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி நடத்தி வைக்க உள்ளார்.

ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் எம்எல்ஏ அலுவலகத்தை அணுகி தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 9840115857என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.