தமிழகம் முழுவதும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை நேரடியாக மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள கரும்புகள் வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட மாட்டாது என தெரிவித்த அவர், அனைத்து நியாய விலைக்கடைகளும் வரும் 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும், தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.