
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபாடல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைகளில் இன்றும் நாளையும் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.