
கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய களப்பயணத்தை தொடங்கினார். அதாவது முன்னதாக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து தானே நேரில் சென்று இனி கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் கட்டமாக கோயம்புத்தூரில் இருந்து தன்னுடைய களப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று அவர் கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளையும் அவர் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி தான் நிச்சயம் அமையும் என்று கூறினார். அதாவது இன்று கோவையில் பொதுமக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தவுடன் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என்பது உறுதியாகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகத்தினர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும் மீண்டும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெறும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது