தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.