தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியின் இளங்கலை படிப்புகள், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கல்லூரி களப்பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது 12ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை அக்டோபர் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கல்லூரி களப்பயணம் கூட்டி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் தொடர்ந்து 35 மாணவர்களை தேர்வு செய்து மாணவர்களுடைய பெயர் பட்டியல் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு உதவி சார்ந்த கல்லூரிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்படுவார்கள், சீருடையில் தான் வரவேண்டும் எனவும் மாணவர்களுக்கான உணவு ஏற்பாட்டை அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 மாணவர்களுக்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.