தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்காக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகைக்கு அல்லது ரொக்க பணத்தை வழங்கி வருகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு குறித்த அரசியல் திட்டம் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமானம் 1.20 லட்சம் என்பதை உயர்த்துவதற்கான கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். தைப்பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுமா அல்லது 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படுமா என்பதை முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் பொங்கல் பரிசு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.