தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல்கள் என பல பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கியும் கழிவு நீர் வெளியேறுவதையும் காண முடிகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மழைக்கால பாதிப்புகளுக்கான மருத்துவ உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பின் போது தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு 104 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணில் ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம். மேலும் காய்ச்சல் மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.