தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வருகையால் 2026 இல் தமிழக அரசியல் களம் மாறும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும். குறிப்பாக தமிழக அரசியலில் முதல் முறையாக நான்கு முறை போட்டி ஏற்பட உள்ளதால் வாக்குகள் பிரிந்து அரசியல் மாற்றம் ஏற்படக்கூடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி அரசு என்று அதிமுக முடிவு எடுத்தால் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த அனுமதி கொடுக்கப்படாத நிலையில் தற்போது பொன்மலை ஜி கார்னரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.