கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு பிரிந்து சென்றார்.

சில நாட்களுக்கு பிறகு அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ள காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த தமிழரசியின் குடும்பத்தினர் அவரை கண்டித்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியுள்ளனர். அதனை தமிழரசி கண்டு கொள்ளவில்லை.

நேற்று மதியம் அபர்ணா ஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக தமிழரசி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழரசியின் குடும்பத்தினர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் தமிழரசியை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது குழந்தையை பிரிந்து வந்தால் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன் என வசந்த் வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி தமிழரசி தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.