தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டி இருக்கிறது.

இதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் சிலர் கூறும் போது மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிற 30-ஆம் தேதி வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.