ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது கூட கேட்காமல் அவர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவது பாஜகவினர் மத்தியில் அப்செட்டை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட எப்படியாவது போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கில் குறைவான வாக்குகள் கிடைத்தாலும் கூட திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி அதிமுக என்பதை நிரூபித்து விடலாம். அதோடு ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தால் அதிமுக தொண்டர்களின் ஆதரவு முழுமையாக தனக்கே இருக்கிறது  என் நிரூபித்து விடலாம் என்றும் எடப்பாடி கணக்கு போட்டு வைத்துள்ளாராம். இதற்காகத்தான் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல்  பணிகளை எடப்பாடி பழனிச்சாமி முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கட்சியின் பிரச்சனை முடிவுக்கு வருவதோடு, பாஜகவின் ஆதரவும் யாருக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.