தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என பல தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக 14.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்துவதற்கு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையாக குறைந்தபட்சமாக மாணவர்களுக்கு 72000 முதல் 7 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2000 ரூபாயாகவும் ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் எனவும் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 8000 ரூபாயும் பட்டப்படிப்பு பயலும் மாணவர்களுக்கு 12,000 ரூபாயும் தொழில் கல்வி மற்றும் முதுகலை பட்டம் பெரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.