தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 150கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் எனவும் தற்போது புதிய வேலையை தேடி வருபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஏவிஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தொழில்முறையாளர்கள், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை வாங்குபவர்கள் https://forms.gle/3irie6FysPwH8w6K6 என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் https://forms.gle/zyiyyRnNnvRFLt1D9 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 0451-2904065 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் விருதாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மூன்று மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை இல்லாத இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.