நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன்,

ஒவ்வொரு உயிரிழப்பு என்று வரும்போது ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. ஒவ்வொரு வகையான காரணம் இருக்கிறது. எந்த ஒரு குழந்தையும் தற்கொலை செய்யணும் அல்லது பெற்றோரின் உயிர் இழப்பு  ஏற்பட வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.

உயிரிழந்திருக்கிற அந்த உயிர் விலைமதிக்க முடியாதது. ஆனால் மாணவர் சமுதாயம்…. நீட் காரணமாக நீங்கள் உயிர் இழக்கலாம். அந்த உயிரிழப்புக்கு பின்பாக நீங்கள் எல்லாம் கிளோரிபை செய்யப்படுவீர்கள். உங்க குடும்பத்திற்கு உதவி கிடைக்கும் என்ற ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்ற கழகம்.

அன்று ஒரு மாணவி பெரம்பலூரில் இறந்தவுடன் அதை மிகப்பெரிய அரசியல் ஆக்கி குளிர் காய்ந்தது திராவிட முன்னேற்ற கழகம். இன்று ஆட்சி அதிகாரம் இவர்களிடம் இருந்த போதும் ஏன் இந்த மாதிரி தற்கொலைகள் நடைபெறுகின்றது. அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.