மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன்.  புதிய புறநானுறு என்ற தலைப்பிலே…  கலைஞர் அவர்கள் பேசினார்கள்.  திரும்ப காரில் போகிற போது சொன்னார்கள்.  நன்கு பேசினாய் நீயும் என்று சொன்னார்கள்.

அதைப்போலவே பேராசிரியர் அண்ணன் அன்பழகன் அவர்களை அதே தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன். திருவள்ளுவர் பற்றி பேசுவதாக சொல்லி,  நான் திருக்குறளை பற்றி பேசினேன். திரும்ப வீட்டுக்கு போகும் பொது அவரே காரை ஓட்டி வந்தார்.

பேராசிரியர் அன்பழகன் தான் காரர் ஓட்டினார். அன்னைக்கு ஓட்டுநர் வரவில்லை. நன்கு பேசினாய் என்று பாராட்டினார். இவர்களுடைய பாராட்டெல்லாம் கிடைச்சது  திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டு,  அதுதானே ”உயிர்” என்று கருதி அங்கே ஒன்றிய பெருந்தலைவர் தேர்தல் வந்த போது…  திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லாமல் இருந்தால் நான் போட்டியில்லை என்று என்னுடைய பகுதியினுடைய ஊராட்சி மன்ற தலைவரிடம் சொன்னேன்.

நான் ரெண்டு ஓட்டு வாங்கி விட்டு வெற்றி பெற்றாலும் சரி… ரெண்டு ஓட்டு வாங்கி தோச்சாலும் சரி நான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் என்பதிலேயே உறுதியாக இருக்கிறேன் என்று சொன்னேன்.  போட்டியிட்டு,  பெரிய செல்வாக்கு படைத்த…  பெரிய ஆலைய அதிபருடைய குடும்பத்தைச் சேர்ந்தவரை எதிர்த்து போட்டியிட்டு எட்டு ஓட்டுகள் வித்தியாசத்தில்…. 14 ஓட்டுக்கள் காங்கிரஸ் ஓட்டுகள் எனக்கு விழுந்தன.  எட்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

எந்த ஒன்றியத்தில் அண்ணா படத்தை திறந்து வைக்க கூடாது என்று தீர்மானம் போட்டார்களோ, அதே குருவி குளம் ஒன்றியத்திற்கு டாக்டர் நாவலரை அழைத்துக் கொண்டு சென்று,  அண்ணா படத்தை திறந்து வைத்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை ஒப்படைத்துக் கொண்ட பிறகு 23 முறை சிறை சென்று இருக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை  உயிராக நேசித்தேன் என தெரிவித்தார்.