தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகம் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் விஜய் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று புதுச்சேரியில் விஜயின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்த நிலையில் தற்போது கூட்டம் தொடங்கியது.
இந்த பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பேசியதாவது, உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து நம்முடைய புதுச்சேரிக்கு நம் தலைவர் வருகை புரிந்துள்ளார். நீங்கள் அனைவரும் தளபதியோட குடும்பம். அவரோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய குடும்பம் என்றால் அது நீங்கள் தான் என தொண்டர்களை பார்த்து அவர் கூறினார். மேலும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான் அமையும் என்றும் ஆனந்த் நெகுழ்ச்சி பொங்க கூறினார்.
