
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள். அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சில தளர்வுகள் விதிக்கப்பட்ட நிலையில் அரசு பணிகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் போன்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த புதிய பயனாளிகளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணம் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாளை பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் நிலையில் நாளை 15 ஆம் தேதி என்பதால் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.