தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பொது தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வு பணிகளை விரைவில் தொடங்க மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் வருகை பதிவு நாட்கள், பள்ளி தேர்வு மதிப்பெண்கள், செயல்திட்டங்கள் மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் அடிப்படையில் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.