
தமிழகத்தில் புதிய வகை மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமமான இதில் தமிழக அரசு என்ற பெயர் TN என்று ஒரு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டிருக்கும். அதனைப் போலவே பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோகச் சக்கரம் கருப்பு நிறத்தில் மாற்றப்படும். யூனியன் ஆப் இந்தியா என்பது இந்திய யூனியன் என மாற்றப்படும். மேலும் உடல் உறுப்பு தானம் குறித்த தொலைபேசி விவரங்கள்,உரிமம் பெற்றவரின் கையெழுத்து என பதினாறு வகை மாற்றங்கள் இதில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.