
தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை மற்றும் திருச்சி என தமிழகத்தில் தற்போது வரை 21 மாநகராட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசு தினத்தன்று முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.