தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும் லஞ்ச புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வெளி ஆட்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட பதிவாளர்களால் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் சார் பதிவாளரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்ற அடிப்படையில் தரகர்கள் நடமாடுவதாக தெரிகின்றது.

இதனை தொடர்ந்து தற்போது அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், சார்பதிவாளர் அலுவலகங்களில் துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தரகர்கள் நடமாட்டத்தை தடுப்பதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சார்பதிவாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரையும் தன்னிச்சையாக எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது எனவும் மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் மூலமாக இதை கண்காணிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.