தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப் போகிறது. ரம்ஜான், தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு, மக்களவைத் தேர்தல் என பல்வேறு காரணங்களால் ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை ஏப்ரல் 13 இல் தொடங்குவதற்கு பதில் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.