தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை வெயில், மழை மற்றும் தேர்தல் ஆகியவற்றை காரணம் காட்டி பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜூன் 6ஆம் தேதி வியாழக்கிழமையும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் என இரண்டு நாட்கள் பள்ளிக்குப் பிறகு விடுமுறை அறிவித்து ஒரே மனதாக ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமைக்கு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.