தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே வெயில் வாட்டி எடுத்து வருவதால் மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியதால் அது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் வெப்ப அலை ஓய்ந்ததாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இருக்காது என தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது