தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என்று பனை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பனைமரத் தொழிலாளர்களுக்கான நல வாரியம் புத்துயிர் பெற்ற செயல்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டில் 20000 புதிய உறுப்பினர்கள் வாரியத்தில் சேர்ந்துள்ளனர். பனை மரங்களை வெட்டக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் அளவிற்கு உற்பத்தி எதுவும் இல்லை. ஆனால் பதநீர் உள்ளிட்ட பனைப் பொருட்களை தனியாக ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யும் திட்டம் முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.