கோடை வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் பணிகள் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி பண்ணினால் வருகின்ற 26 ஆம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்பதாம் வகுப்புக்கு விடுபட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து கோடை விடுமுறையாகும்.

அடுத்த கல்வியாண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இருந்தாலும் தற்போது தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாலும் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் பள்ளிகளுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.