நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக தொடங்கிய தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். அதுகுறித்த வீடியோ வேகமாக பரவியது. இவர் நடிகர் விஜய்யை பின்பற்றுகிறார். அவரை போல் சைக்கிளில் வருகிறார் என பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் போனேன். அப்பா, அம்மாவிடம்தான் வாகனம் உள்ளது. இங்குள்ள மோசமான சாலையில் வண்டியில் போவது கஷ்டம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.