வரும் கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசுப் பள்ளி இருப்பின் அதேபகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இடஒதுக்கீடு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. RTEக்கு அதிகத் தொகை செலவழிப்பதைக் கட்டுப்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

ஏப்ரல் 1, 2010 அன்று கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றிய 135 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.