தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மதியம் 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் தற்போது மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் வெயில் கடுமையாக இருப்பதால் கூடுதல் விடுமுறை அளித்து பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை தாமதமாக திறப்பது குறித்து தற்போது எந்த முடிவு எடுக்க முடியாது. வெயில் தாக்கத்தை பொறுத்து அதற்கு தகுந்தபடி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர் அதிக அளவில் JEE பயிற்சி வகுப்பில் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.