தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். இதனால் அவர்களது வசதிக்காக சிறப்புப் பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் வார இறுதி நாட்களில் பொங்கல் பண்டிகை வந்திருப்பதால், மக்களின் நலன் கருதியும், ஊருக்குச் செல்வோரின் வசதிகாகவும், ஒரே நேரத்தில் பலரும் ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வருகிற வெள்ளிக்கிழமை அன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாக அரசு வட்டாரத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கிறது.