தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.