தமிழகத்தில் நாளை கார்த்திகை மாதம் பிறக்க இருப்பதால் அதிகாலை 4.45 மணியளவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அண்ணாமலை கோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகா தீபத்தை பார்க்க பல மாவட்டங்களில் இருந்தும் லட்சுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பலத்தை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.