செவ்வாய்க் கிழமை சுதந்திர தின விடுமுறை என்பதால் இன்று முதல் தொடர் விடுமுறை (திங்கட்கிழமை விடுமுறை விடுத்தால்) ஆக உள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது.

இதையொட்டி, நேற்றும், இன்றும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்துள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். இதுதொடர்பாக அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.