தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தத்தன் குறிச்சியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பும் பின்பும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது