தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி பிரச்சனை தொடர்பான மோதல்களை தவிர்ப்பதற்கு பெற்றோரிடம் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி பிரச்சனைகள் உள்ளதா என்று ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஜாதி ரீதியான பிரச்சினையை தடுக்கும் விதமாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோராகியரிடம் உறுதிமொழி கடிதம் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி வளாகத்தில், வெளியில் ஜாதி பிரச்சனைகளை ஏற்படுத்த மாட்டேன் அவ்வாறு புகார் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு சம்மதிக்கிறேன் என கடிதம் எழுதி வாங்க பள்ளி கல்வித்துறை தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.