தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருந்து வருகிறது என கூறியுள்ளார்.

“ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகிவிடுகின்றனர். எனவே, உருமாறிய கொரோனா தொற்று குறித்து யாரும் பயப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்